ஒலி வடிவ நூல்கள் எதற்காக?!! 

நம் மொழியை பிற மொழிச் சொற்கள் கலக்காமல் சரளமாக பேசுவதற்கும், புரிந்து கொள்வதற்கும்,  மொழியின் சொற்கோவைகளை அறிந்து கொள்வதற்கும், மொழியின் ஒலியமைப்பை தெரிந்து கொள்வதற்கும்,நம்முடைய கவனிக்கும் திறனை அதிகரிப்பதற்கும் ஒலி வடிவ நூல்கள் பயன்படுகின்றன.மேலும் கண் பார்வையற்றோர்களுக்கும், முதுமையினால் வாசிக்க இயலாதவர்களுக்கும் இந்த ஒலி வடிவ நூல்கள் அவர்களுக்கான உலகை உருவாக்கி கொடுக்கும்.

நமக்கே யாரேனும் கதை சொல்லி அதை கேட்க ஆசைப்படும் தருணங்களில் ஒலி வடிவ நூல்கள், நம் திண்ணையில் நமக்காக அமர்ந்து கதை சொல்லும் ஒரு நபராக மாறக்கூடும்.

                                                                               நன்றி....

அன்புடன்,

மனோபாரதி விக்னேஷ்வர்.